HISTORY

துவக்கம்

         1981-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இத்தொழிற்பயிற்சி நிலையம் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது.கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பெண்களுக்கு, குறிப்பாக இவ்வட்டார ஏழை எளியமாணவிகளுக்கு சிறப்பான முறையில் தொழிற் பயிற்சி அளித்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.



மேலும் கம்மியர் வானொலி மற்றும் தொலைக்காட்சி பிரிவு, தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணு சாதனங்கள் பராமரிப்பு பிரிவாக மேம்படுத்தப்பட்ட நடைபெறுகிறது.

பயிற்சி மற்றும் இதர வசதிகள்:

கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்று பயிற்சிகள் நடைபெறுகின்றது. சுருக்கெழுத்து தட்டச்சு தமிழ் பிரிவு மட்டும் மாநில அரசின் முறைப்படி நடைபெறுகிறது.

இந்நிலையத்தில் 35 தொழில் நுட்ப பணியாளர்களும் அமைச்சுப் பணியாளர்களும் மாணவிகளின் முன்னேற்றத்திற்காக பணியாற்றுகிறார்கள்.தற்போது ஒரு ஆண்டுக்கு சுமார் 200 மாணவிகள் சிறப்பான முறையில் தொழிற் பயிற்சி பெற்று செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் தேதி அன்று பயிற்சி தொடங்குகின்றது. ஜூலை மாதத்தில் அகில இந்திய தேர்வு நடைபெறுகிறது.

ஆதி திராவிடர் நலத்துறையினரால் இந்நிலையத்திற்கென மாணவிகளுக்கு இலவச விடுதி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. மாதாந்திர உதவித்தொகை பயிற்சியாளர்களுக்கு அரசு விதிகளின் படி மாதம் ரூ.500-வழங்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment