வேலைவாய்ப்பு:
மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் பயிற்சி முடிப்பவர்கள்,அந்தந்த தொழிற் சார்ந்த தனியார் மற்றும் அரசு துறைகளில்உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வேலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
தொழில் ரீதியாக வளர்ந்து வரும் சூழலில் உள்ள நமது நாடு இது போன்ற அடிப்படை தொழிற்பயிற்சி பெற்றவர்களின் தேவைஅதிகமாகி வருகிறது.
மேலும் சில பிரிவுகளில்,குறிப்பாக சுருக்கெழுத்து பிரிவு,கணினி பிரிவு போன்ற பிரிவுகளில் பயிற்சி முடிப்பவர்களுக்கு மத்தியமற்றும் மாநில அரசுகளின் அலுவலகங்களில் வேலைக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இது மட்டும் இல்லாது "கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை என்று ஒத்துக்கொள்" என்ற வாக்கியத்துக்கேற்ப தொழில்முனைப்பில் நாட்டமுள்ளவர்களுக்கு சுய தொழில் செய்வதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது. இதற்கான கடன் உதவிகள் அரசாங்கத்தால்அளிக்கப்பட்டு வருகிறது.
சாதனைகள்:
இந்நிலைய மாணவிகள் பலமுறை மாநில அளவிலான தேர்வுகளில் தேர்ச்சிப்பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். அவ்வரிசையில் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த தட்டச்சுதமிழ் இளநிலை தேர்வில் சுருக்கெழுத்து தட்டுச்சு (தமிழ்) பிரிவில் பயின்ற வி.பாக்கியவதி என்ற பயிற்சியாளர் மாநிலத்திலேயே முதலாவதாக தேர்ச்சிப்பெற்றுள்ளார்.
மேலும், 2011-ம் ஆண்டு நடைபெற்ற மாநில திறனாய்வுத் தேர்வில் Draughtsman Civil பிரிவில் எஸ்.ஸ்ரீதா என்ற பயிற்சியாளரும், Draughtsman Mechanical பிரிவில் ஆர்.திவ்யா என்றபயிற்சியாளரும் மாநிலத்திலேயே முதல் இடம் பெற்றுள்ளார்கள்.
விளையாட்டு:
இத்தொழிர்பயிர்சி நிலைய பயிற்சியாளர்கள் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டுத்துறையிலும் சிறந்த வீராங்கனைகளாக விளங்குகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக மண்டலஅளவிலும் பல வெற்றிகளை பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment